உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சிவகாசி : சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை வெள்ளி சிங்கம் வாகனத்தில் மாரியம்மன் கோயிலிலிருந்து அம்மன் கோயிலில் இருந்து பத்ரகாளியம்மன் கோயிலுக்கு எழுந்தருளி சென்றார். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அம்பிகை திருவீதி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு, அம்மன் காமதேனு, கைலாச பர்வத, வேதாளம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருதல் நடக்கிறது. 8ம் நாள் திருவிழாவாக மே 7ல் பொங்கல் திருவிழா, மறுநாள் கயறு குத்து திருவிழா, மே 9ல் தேரோட்டம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை