உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: மக்கள் அதிருப்தி

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: மக்கள் அதிருப்தி

சிவகாசி : சிவகாசி ரயில்வே பீடர் ரோடு மேட்டு தெருவில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிவகாசி ராணி அண்ணா காலனி ரயில்வே பீடர் ரோடு, நகர ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள மேட்டுத் தெருவில் குழாய் பதிக்கப்பட்டுஉள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. மேட்டுத் தெருவில் பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து குடிநீர் வினியோகம் செய்யும் போதெல்லாம் குழாயை விட்டு வெளியேறி ரோட்டில் ஓடி வீணாகின்றது. இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு உடனடியாக உடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதேபோல் ராணி அண்ணா காலனி பகுதியில் உடைந்த குழாயினை சரி செய்ய வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை