| ADDED : ஜூன் 26, 2024 07:34 AM
சிவகாசி: சிவகாசி அருகே எரிச்சநத்தத்தில் வேன் மீது சரக்கு லாரி மோதியதில் 15 பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.அழகாபுரி ரோடு கோபால்சாமி மலை அருகே தனியாருக்கு சொந்தமான மில் உள்ளது. இந்த மில்லில் எரிச்சநத்தம், குமிழங்குளம், சித்தமநாயக்கன்பட்டி, புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பேரையூர் தாலுகா கண்ணாபட்டியை சேர்ந்த கார்த்திக் வேனில் நேற்று வேலைக்கு செல்பவர்களை ஏற்றிக்கொண்டு அழகாபுரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்தங்கல் பெத்து செட்டிபட்டியைச் சேர்ந்த அய்யனார் ஓட்டி வந்த சரக்கு லாரி வேனின் மீது மோதியது. இதில் டிரைவர் கார்த்திக், வேனில் வந்த குமிழங்குளம் மகேஸ்வரி 37, சித்தமநாயக்கன் பட்டி கணபதி 40, மகாலட்சுமி 37, புதுக்கோட்டை பையிட்டம்மாள் 38, தமிழ்ச்செல்வி 23, சுந்தராம்பாள் 49, சொக்கலிங்கபுரம் சீதாலட்சுமி 25, என 15 பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விருதுநகர் மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.