அருப்புக்கோட்டையில் முதல்வர் மருந்தகம் திறப்பு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை யில் முதல்வர் மருந்தகத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். சென்னையில் கூட்டுறவு துறை சார்பில் மக்களுக்கு மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகத்தை முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மருந்தகங்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.அருப்புக்கோட்டையில் நடந்த விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாணிக்கம் தாகூர், எம்.பி., முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அருப்புக்கோட்டையில் தெற்கு தெரு, பந்தல்குடி ரோடு மற்றும் எம். ரெட்டியபட்டி, வீரசோழன் உள்ளிட்ட பகுதிகளில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.