உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணிவிடுவிப்பு

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணிவிடுவிப்பு

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முறையாக கண்காணிக்காத ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தனலட்சுமியை பணிவிடுவிப்பு செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் திட்ட அலுவலராக தனலட்சுமி பணியாற்றி வந்தார். இவரது கட்டுப்பாட்டில் அங்கன்வாடி மையங்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து நடவடிக்கைகள் வரும். இந்நிலையில் ஊட்டச்த்து குறைபாட்டை தடுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது. இதில் திட்டங்களை முறையாக செயல்படுத்தாமலும், கண்காணிக்காமலும் இருந்தது தெரிந்த நிலையில் திட்ட அலுவலர் தனலட்சுமியை கலெக்டர் ஜெயசீலன் பணிவிடுவிப்பு செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை