உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்மாயில் செத்து மிதந்த மீன்கள்

கண்மாயில் செத்து மிதந்த மீன்கள்

சேத்துார் : சேத்துார் அருகே கண்மாயில் வளர்க்கப்பட்ட மீன்கள் செத்து மிதந்ததால் முன்பகை காரணமாக விஷம் கலக்கப்பட்டுள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.சேத்துார் அருகே சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் பொன்இருளப்பன். அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரம் கொசவன் குளம் கண்மாயில் மீன் பாசி ஏலம் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ரூ.1.25 லட்சம் செலுத்தி மீன்களை வளர்த்து விற்பனை செய்துள்ளார்.இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் கட்டி மூன்று மாதங்களுக்கு முன் ரூ.70 ஆயிரம் மதிப்பில் மீன் குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளார். ஒரு கிலோ வரை வளர்ச்சி காணும் இந்த வகை மீன்கள் தற்போது 400 கிராம் வரை வளர்ந்துள்ளது. நேற்று காலை கண்மாய்க்கு சென்று பார்த்தபோது மீன்கள் மிதந்துள்ளது.மேலும் மீன்களுக்கு உணவாகும் சிறிய கூனி வகை இறால் குஞ்சுகளும் செத்து மிதந்துள்ளது. முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர் விஷம் கலந்து இருக்கலாம் என சேத்துார் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் புகார்படி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !