உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தெப்பத்தில் செத்து மிதந்த மீன்கள்

தெப்பத்தில் செத்து மிதந்த மீன்கள்

விருதுநகர்: விருதுநகர் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பத்தில் மீன்கள் செத்து மிதந்தன.விருதுநகர் மேலத்தெருவில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இந்த கோயின் தெப்பம் வாயிலின் முன் பகுதியில் அமைந்துள்ளது. இதில் ஏராளமான மீன்கள் இருந்தன. வரும் பக்தர்கள்அவ்வப்போது பொறி போட்டு செல்வர். இந்நிலையில் நேற்று காலை தெப்பத்தில் மீன்கள் செத்து மிதந்தன.தண்ணீர் முறையாக சுத்தம் செய்து பராமரிக்கப்படாமல் உள்ளதால் இறந்திருக்கலாம் என பக்தர்கள் கருதுகின்றவனர். கோயிலில் திடீரென மீன்கள் இறந்ததால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ