மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
17 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
18 hour(s) ago
சாத்துார்: இருக்கன்குடி ஊராட்சியில் செயல்படாமல் உள்ள மினரல் வாட்டர் பிளான்டால் மக்கள் குடிநீருக்கு திண்டாடி வருகின்றனர்.இருக்கன்குடி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது.செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய கிழமைகளில் ஏராளமான வெளியூர் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்லுகின்றனர்.இருக்கன்குடி கோயில் வளாகத்தை தவிர்த்து ஊருக்குள் உள்ள குடிநீர் குழாயில் வரும் குடிநீர் முழுவதும் உப்பு சுவையுடன் இருப்பதால் வெளியூர் பக்தர்கள் பணம் கொடுத்து வாட்டர்பாட்டில் விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சுவையான குடிநீர் குடிப்பதற்காக ஊராட்சி சார்பில் மினரல் வாட்டர் பிளான்ட் அமைக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மினரல் வாட்டர் பிளான்ட் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.இதனால் மக்கள் வேறு வழி இன்றி வாகனங்களில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை குடம் ரூ 12 கொடுத்து விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் உள்ளூர் மக்களுக்கும் வெளியூர் பக்தர்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. பெரும்பாலான வெளியூர் பக்தர்கள் ஊராட்சி பகுதிக்கு வந்து குடிநீர் சேகரித்து செல்லுகின்றனர்.இதற்கு ஏற்றார் போல் கோயிலுக்கு செல்லும் வழியிலேயே மினரல் வாட்டர் பிளான்ட் இருந்ததால் பக்தர்களும் பொதுமக்களும் வசதியாக இருந்தது. தற்போது பழுதாகியுள்ளதால் தண்ணீருக்காக அலையும் நிலை உள்ளது.விரைவில் இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.செந்தாமரை, இருக்கன்குடி ஊராட்சித் தலைவர்: மினரல் வாட்டர் பிளான்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் படும், என்றார்.
17 hour(s) ago
18 hour(s) ago