உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டாஸ்மாக் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

டாஸ்மாக் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

விருதுநகர்: கடந்த 22 ஆண்டுகளாக ஒப்பந்தத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என விருதுநகரில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் பொதுச் செயலாளர் திருச்செல்வன் தெரிவித்தார்.விருதுநகரில் நடந்த மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் 4829 உள்ளன. 24 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2017ல் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் படி மூடப்பட்ட 3300 கடைகளில் இருந்த உபரி ஊழியர்கள் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்டனர்.இதில் 22 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் இதுவரை பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.சிவகாசி, கோவையில் எப்.எல்., 2 லைசென்ஸ் பெற்ற மனமகிழ் மன்றங்கள் ஏராளமாக திறக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் ஈடுபடுவதால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கும் பணி ஓய்வு காலத்தை 60 வயதாக தீர்மானிக்க வேண்டும்.ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அனைத்து தொழிலாளர்களின் சங்கங்களையும் திரட்டி போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி