மேலும் செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
31-Jan-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 6 வார சம்பள பாக்கியை தர கோரி, பாலவநத்தம் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலவநத்தம் ஊராட்சியில் 100 நாள் வேலையில் அப்பகுதி பெண்கள் பணி செய்து வந்தனர். இந்நிலையில், 6 வாரமாக சம்பள பாக்கி தராததாலும், பணி தள பொறுப்பாளர்கள் தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும், பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பூங்கோதை, மாவட்ட செயலர் சுந்தரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் பி.டி.ஓ., சூரியகுமாரியிடம் மனு அளித்தனர்.
31-Jan-2025