விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது.விஜய கரிசல்குளத்தில் 3 ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி, சூது பவள மணி என 1700 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட 9 வது குழியில் சுடுமண்ணால் ஆன கூம்பு வடிவ சிவப்பு நிற கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில் ''முன்னோர்கள் தொழிற்கூடங்கள் நடத்தி, வசித்ததற்கான சான்று அதிக அளவில் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள கிண்ணம் உணவு அருந்துவதற்கு அல்லது மூடியாக பயன்பட்டிருக்கலாம். மேலும் இந்தக் கிண்ணம் கூம்பு வடிவத்தில் சிவப்பு நிறத்தில் உள்ளது. எந்த பொருளாக இருந்தாலும் அதனை ரசனையாக பயன்படுத்தி உள்ளனர் என்றார்.