உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் சிறுத்தைகள் நடமாட்டமா? வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் சிறுத்தைகள் நடமாட்டமா? வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா என்பதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதி தேவதானத்தில் துவங்கி சேத்தூர், ராஜபாளையம், செண்பகத்தோப்பு, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள், சாப்டூர், கிருஷ்ணாபுரம் வழியாக தேனி மாவட்டம் நோக்கி செல்கிறது.இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் அதிகரித்து மா, தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு புதுப்பட்டி மலையடிவாரத்தில் ஒரு மாட்டினை சிறுத்தை ஒன்று அடித்துக் கொன்றதால் மலையடிவார தோப்புகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.இதனையடுத்து வனத்துறையினர் தங்களது ரோந்து பணியை தீவிர படுத்தினாலும் கடந்த வாரம் ராக்காச்சி அம்மன் கோயில் மலையடிவாரத் தோப்பில் யானை ஒன்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. அதற்கு அடுத்த நாள் அதே பகுதியில் ஒரு சிறுத்தை இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து மலையடிவார தோப்புகளில் வனத்துறையினர் தேடிய போது, அது ஒரு வதந்தி என உறுதிப்படுத்தப்பட்டது.இருந்தபோதிலும் தேவதானத்தில் துவங்கி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் ஆகிய நான்கு வனச்சரகத்தின் மலையடிவார தோப்புகளில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா என்பதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை