உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துாக்கத்தில் பெண் விழுங்கிய  பல் செட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய டாக்டர்கள்

துாக்கத்தில் பெண் விழுங்கிய  பல் செட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய டாக்டர்கள்

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் வீட்டில் துாக்கத்தில் பல் செட்டை விழுங்கிய சுப்புலட்சுமி 57, அறுவை சிகிச்சை மூலம் பல் செட்டை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.திருமங்கலம் போத்தநதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி 57. இவருக்கு முன்பக்க மேல் வரிசையில் பல் செட் பொருத்தப்பட்டிருந்தது.இவர் மே 25 ல் வீட்டில் துாங்கிய போது பல் செட்டை விழுங்கி விட்டார். இதனால் எச்சில் கூட விழுங்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக காலை 9:00 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவரை பரிசோதனை செய்த காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் கம்பியுடன் கூடிய பல் செட் உணவுக்குழாயில் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். மேலும் சுப்புலட்சுமிக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் காலை 11:00 மணிக்கு டீன் சீதாலட்சுமி தலைமையில் அறுவை சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் லதா மேற்பார்வையில் மயக்கவியல், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு மருத்துவக் குழுவினர் நோயாளிக்கு முழு மயக்க மருந்து செலுத்தி வாய் வழியாக குழாய் பொருத்தி அறுவை சிகிச்சை செய்து பல்செட்டை வெளியே எடுத்தனர். மேலும் இவரை இரண்டு நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்தனர். தற்போது சிகிச்சை முடிந்து மூச்சுத்திணறல், உணவு உட்கொள்வதில் எவ்வித சிரமமும் இன்றி நலமாக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ