உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி தட்டாவூரணியில் பயன்பாடின்றி குடிநீர் தொட்டி

சிவகாசி தட்டாவூரணியில் பயன்பாடின்றி குடிநீர் தொட்டி

சிவகாசி : சிவகாசி தட்டாவூரணி பகுதியில் குழாய் பதிக்கப்பட்டு, மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டியும் பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் மாநகராட்சி வாகனம் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்குவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சிவகாசியிலிருந்து விளாம்பட்டி செல்லும் ரோட்டில் 48 வது வார்டுக்கு உட்பட்ட தட்டாவூரணி பகுதி உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டது. ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டது.ஆனால் இதுவரையிலும் குடிநீர் வினியோகம் செய்யாமல் 15 நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி வாகனம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. மாதத்திற்கு இரு முறை மட்டுமே குடிநீர் கிடைப்பதால், குடிநீரை பிடிக்க, ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்ட குடங்களுடன் மக்கள் வருவதால் அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.மேலும் குடிநீரும் போதுமான அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக உள்ளது. எனவே இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் மேல் நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ