மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
17 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
17 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் பருத்தி விளைச்சலும் இல்லை, விலையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டதால் பருத்தி விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் நெல் பயிருக்கு அடுத்தபடியாக பருத்தி, மக்காச்சோளம் விவசாயம் தான் மிகவும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் பல நுாறு ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பருத்தியின் விளைச்சலும், விலையும் விவசாயிகளுக்கு பேருதவியாக இருந்தது. அப்போது ஒரு குவிண்டால் பருத்தி ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை போனது. இதனால் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர்.நடப்பு ஆண்டில் பருத்தி நடவு துவங்கும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் போதிய மழை இல்லாமலும், தற்போது அறுவடை துவங்கும் மே மாதத்தில் சாரல் மழை பெய்ததால், போதிய பருத்தி விளைச்சல் பாதித்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.இந்நிலையில் தரமான பருத்தி தற்போது ஒரு குவிண்டால் ரூ 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை தான் கொள்முதல் செய்யப்படுகிறது. அதிலும் சற்று தரம் குறைந்த பருத்திகள் ரூ.5 ஆயிரத்துக்கும் கீழ் தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் பருத்தி விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.விவசாயி ராஜேஷ் கூறுகையில், கடந்த 2022-ல் சரியான பருவத்தில் மழை பெய்து பருத்தி விளைச்சல் அதிகரித்தது. இதனால் ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால், நடப்பு ஆண்டில் பருத்தி போதிய விளைச்சலும் இல்லை கொள்முதல் விலையும் கட்டுபடியாகவில்லை.விவசாய தொழிலாளர்களுக்கு சம்பளம், இடுபொருட்கள் விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும்.எனவே அரசே நேரடியாக பருத்தி கொள்முதல் செய்து நல்ல விலை கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டில் பருத்தி விவசாயம் முடியும் தருவாயை நெருங்கிக் கொண்டுள்ள நிலையில் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
17 hour(s) ago
17 hour(s) ago