உள்ளூர் செய்திகள்

கஞ்சா: ஒருவர் கைது

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு எஸ்.ஐ. விஜய் சண்முகநாதன் நேற்று முன்தினம் தாணிப்பாறை ரோட்டில் வாகன சோதனை செய்தார். அப்போது டூவீலரில் வந்த மகாராஜபுரம் சத்தியராஜ் என்பவரை நிறுத்தி, அவர் ஓட்டி வந்த டூவீலரை சோதனை செய்தபோது, ஒரு பையில் 1.1 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தார்.இதனையடுத்து அவரை கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தார்.அவரிடம் நடத்திய விசாரணையில், உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டத்தை சேர்ந்த பாண்டி என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி, கூமாபட்டி காலனியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருடன் சேர்ந்து விற்பனைக்கு கொண்டு செல்வதாக தெரிந்தது. இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ