உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க மாவட்ட பொதுக் குழு கூட்டம், நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சந்தனமாரி தலைமை வகித்தார். சிவகாசி மாவட்ட தலைவர் அமலா புஷ்பம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுதா வரவேற்றார்.கூட்டத்தில், தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய உயர்வு காலிப்பணியிடங்களை நிரப்புவது, நேரடி ஆய்வு, காணொலி ஆய்வு கூட்டம் நடக்கும் போது அச்சுறுத்துவது போன்றும் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதை கண்டிப்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விஜயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ