மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் புதியதாக மருத்துவமனை மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு தினமும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு வெளி நோயாளியாக சிகிச்சை பெற வருபவர்கள் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் பெயர், அலைபேசி எண், நோய் குறித்து விவரங்களை கொடுத்து பதிவு சீட்டு பெற்று டாக்டர்களிடம் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு டாக்டர்கள் கொடுக்கும் மருந்து சீட்டுகளை பெற்று மருந்தகத்தில் மருந்து வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் புதியதாக மருத்துவமனை மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி நோயாளிகள் பிரிவில் பதிவும் செய்யும் போதே நோயாளிகளுக்கு தனி எண் கொடுக்கப்படும். இவர்கள் டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று பின் மருந்து சீட்டு இல்லாமல் தனி எண் மூலம் மருந்தகங்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து, மாத்திரைகள் கணினி மூலம் அனுப்பப்படும்.இந்த தனி எண் சீட்டை மட்டும் நோயாளி கொண்டு சென்று மருந்தகத்தில் கொடுத்தால் போதும் மருந்தாளுனர்கள் கணினியில் விவரங்களை சரிபார்த்து விட்டு தனி எண்ணை பதிவு செய்து மருந்துகளை வழங்குவர். இதே முறை ரத்த, சிறுநீர் பரிசோதனைகளுக்கும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் பரிசோதனை முடிவுகளை டாக்டர்கள் கணினி மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும் வழக்கம் போல நோயாளிகளுக்கும் பரிசோதனை முடிவு நகல் கொடுக்கப்படுகிறது.இதன் மூலம் அரசு மருத்துவமனை கிடங்கில் உள்ள மருந்து, மாத்திரைகளின் கையிருப்பை நேரடியாக டீன் தெரிந்து கொள்ள இந்த திட்டம் உதவுகிறது. புதியதாக துவங்கிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
12 hour(s) ago
12 hour(s) ago