உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டாஸ்

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டாஸ்

விருதுநகர் : மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர் முத்து இருளாண்டி 27. இவர் வேனில் ஜூலை 19 ல் விருதுநகர் அருகே இருக்கன்குடி -- பாலவநத்தம் ரோட்டில் 40 கி வீதம் 33 மூடைகளில் 1320 கி ரேஷன் அரிசியை கடத்தினார்.இவரை விருதுநகர் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்து விருதுநகர் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ரேஷன் அரிசி கடத்தலை தொடர்ச்சியாக செய்து வந்ததால், கலெக்டர் ஜெயசீலன் உத்தரவில் முத்து இருளாண்டி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்