மேலும் செய்திகள்
நீதிமன்றம் பணிகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள்
24-Aug-2024
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடந்தது.வழக்கறிஞர் சங்க தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி.அழகிரிசாமி, மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். பின்னர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
24-Aug-2024