உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் பஸ் கூரையில் அமர்ந்து மாணவர்கள் ஆபத்தான பயணம்

விருதுநகரில் பஸ் கூரையில் அமர்ந்து மாணவர்கள் ஆபத்தான பயணம்

விருதுநகர்: பெரிய வள்ளிக்குளத்திலிருந்து விருதுநகர் நோக்கி வந்த தனியார் பஸ்சின் கூரையில் அமர்ந்து கல்லுாரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். விருதுநகர் பள்ளி, கல்லுாரிகளுக்கு புறநகர், ஊரகப்பகுதிகளில் இருந்து அதிகமான மாணவர்கள் தினமும் அரசு, தனியார் பஸ்களில் வந்து பயின்று வருகின்றனர்.ஆனால் ஊரகப்பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு வந்து செல்லும் நேரங்களில் முறையாக பஸ்கள் இயக்கப்படாததால் தினமும் படிக்கட்டில் பயணம் செய்து வந்து செல்கின்றனர்.நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பெரிய வள்ளிக்குளத்தில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த( டி.என் 95, ெஹச் 2671)தனியார் பஸ்சில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணித்தனர். அதிலும் மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியும், கூரையில் அமர்ந்தப்படி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.இந்த பஸ் ரோட்டில் செல்லும் போது வளைவு பகுதியில் சாய்ந்து விடும் நிலையில் சென்றது. கூரையில் அமர்ந்த மாணவர்களில் யாராவது ஒருவர் ரோட்டில் விழுந்தாலும் பின்னால் வரும் வாகனங்களில் விழுந்து உயிரிழக்கக்கூடும்.எனவே ஊரக பகுதிகளுக்கு பள்ளி நேரங்களில் அதிக பஸ்களை இயக்க வேண்டும். மேலும் அலட்சியமாகவும், அதிகமான பயணிகளை ஏற்றி உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பஸ்சை செலுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ