உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் நாமத்துவார் உபன்யாசம் துவக்க விழா

சாத்துார் நாமத்துவார் உபன்யாசம் துவக்க விழா

சாத்துார் : சாத்துார் நாமத்துவார் சார்பில் காசி விசுவநாதர் கோயிலில் பக்த விஜயம் என்ற தலைப்பில் 7 நாள் உபன்யாசம் நேற்று முன்தினம் துவங்கியது.மகாரண்யம் முரளிதர சுவாமிஜியின் சீடர் ஸ்ரீ ஹரிஹரசுப்பிரமணியன் உபன்யாசம்.நிகழ்ச்சியில் கூறியதாவது: நல்லவர்களுடன் சேரும் போது நற்குணம் வளரும். ராமாயணத்தில் கைகேயி, கூனியுடன் பழகியதால் குடும்பஒற்றுமை நீங்கி தீயஎண்ணங்கள் வளர்ந்தது. சத்சங்கத்தில் இணைய இறைவன் அருள் வேண்டும். இறைவன் அருள் பெற்றவர்களே சத்சங்கத்தில் இணையவார்கள். என்றார்.நாமத்துவார் சத்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். உபன்யாசம் ஜூன் 2 வரை நடைபெறுகிறது. சா குளோபல் ஆர்கனைசேஷன் பார்டடிவைனிடி இந்தியா டிரஸ்டு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.முன்னதாக நாமத்து வார்சத் சங்கத்தில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி ஹரே ராம ஹரே கிருஷ்ண மந்திர ஜெப வழிபாடு நடந்தது.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை