உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பணி நியமன ஆணை வழங்கல்

பணி நியமன ஆணை வழங்கல்

சிவகாசி: பி.எஸ்.ஆர்.. பாலிடெக்னிக் கல்லுாரியில் சென்ற கல்வி ஆண்டில் படிப்பை முடித்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் பணி நியமன ஆணை பெற்று சாதனை படைத்துள்ளனர்.சாதனைக்கு உறுதுணையாக இருந்த முதல்வர் சங்கர சுப்பிரமணியன், பேராசிரியர்கள், மாணவர்களை கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஷ்வரி பாராட்டினர்.கல்லுாரி இயக்குனர் விக்னேஸ்வரி கூறுகையில், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு தரவரிசை பட்டியலில் மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு பெற்றுத் தந்ததில் பி.எஸ்.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரி மாவட்ட அளவில் மூன்றாவது இடம் பிடித்த சாதனை படைத்துள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை