உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூதாட்டிகளிடம் நகை திருட்டு: இருவர் கைது

மூதாட்டிகளிடம் நகை திருட்டு: இருவர் கைது

சிவகாசி: சிவகாசி பகுதியில் பஸ்சில் தனியாகச் செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து நகை திருடி இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.சிவகாசி பூவநாதபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கோசலை 65. அரசு பஸ்சில வரும் போது அருகில் அமர்ந்திருந்த பெண் , கோசலை கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச் செயினை திருடி தப்பினார். டவுன் போலீசார் விசாரித்து வந்தனர். மூதாட்டியிடம் நுாதனமாக நகை திருடிய கோவில்பட்டி மந்தி தோப்பைச் சேர்ந்த பொன்னுத்தாயை 28, போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து நான்கு பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.இதே போல் 5 நாட்களுக்கு முன்பு இதேபோல் பஸ்சில் வந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து அருகில் நின்றிருந்த பெண் 7 பவுன் தங்கச்செயினை திருடி தப்பினார். போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி களை வைத்து விசாரித்து வந்த நிலையில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் தெப்பக்குளம் போலீசார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திரா காயத்ரியை கைது செய்தனர்.விசாரனையில் இவர் சிவகாசி மூதாட்டியிடம் 7 பவுன் திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து சிவகாசி போலீசார் இந்திரா காயத்ரியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை