உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டில் கொட்டப்படும் இளநீர் ஓடுகள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ரோட்டில் கொட்டப்படும் இளநீர் ஓடுகள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சிவகாசி : சிவகாசி இரட்டைப் பாலத்தில் இருந்து கட்டளைபட்டி செல்லும் ரோட்டில் இரு புறமும் கொட்டப்பட்டுள்ள இளநீர் ஓடுகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.சிவகாசி இரட்டைப் பாலத்தில் இருந்து கட்டளை பட்டி செல்லும் ரோட்டின் இரு புறங்களுமே கழிவுகள் கொட்டப்படும் பகுதியாக மாறி வருகின்றது. இந்த ரோடு முழுவதுமே சேதம் அடைந்துள்ள நிலையில் இளநீர் ஓடுகள் உள்ளிட்ட கழிவுகள் ரோட்டின் அருகிலேயே கொட்டப்படுகின்றது. இவைகள் அவ்வப்போது ரோட்டிற்கு வந்து விடுகின்றது. சேதமடைந்துள்ள ரோட்டில் டூவீலர்கள் தட்டு தடுமாறி வரும்போது, இளநீர் ஓடுகளின் மீது ஏறி விபத்தில் சிக்குகின்றனர்.எதிரெதிரே வருகின்ற வாகனங்கள் எளிதில் விலகிச் செல்ல முடியவில்லை. தவிர இந்த கழிவுகள் சில சமயங்களில் அருகில் உள்ள பெரியகுளம் கண்மாய்க்குள்ளும் கொட்டப்படுவதால் நீர் நிலையும் மாசடைகின்றது. எனவே இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள இளநீர் ஓடுகளை அகற்றுவதோடு வருங்காலத்தில் கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ