உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகமும், மத்திய வேளாண் வன ஆராய்ச்சி நிலையமும், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறையில் மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கும், திறன் மேம்பாட்டுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.இதில் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அருணாச்சலம், பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் கையெழுத்திட்டனர். இதற்கான விழா வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இணை வேந்தர் டாக்டர் அறிவழகி, துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். டீன்கள் பாண்டியராஜன், ஜேசு எட்வர்ட் ஜார்ஜ், வனவள அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்றனர். துறைத்தலைவர் பாண்டியராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை