உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளிகளுக்கு காமராஜர் விருது

பள்ளிகளுக்கு காமராஜர் விருது

விருதுநகர்,: விருதுநகர் மாவட்டத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது, பரிசு தொகை வழங்கப்பட்டது.பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி நேற்றுகலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் கல்வியாண்டில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட கிழவிகுளம் ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம், மானுார் ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், மம்சாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் ஆகியவற்றை காசோலையாக கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். மேலும் வரும் கல்வி ஆண்டில் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமென தலையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். முதன்மைக் கல்வி அலுவலர் வளர்மதி, இடைநிலை டி.இ.ஓ., இந்திரா உட்பட பலர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி