மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
காரியாபட்டி:மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலை காரியாபட்டி பிரிவு ரோடுகளில் உயர் கோபுர மின் விளக்கு பல நாட்களாக எரியாமல் இருளில் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. உடனடியாக உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தூத்துக்குடி துறைமுகம், திருச்செந்தூர் முருகன் கோயில் இருப்பதால் மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள், கார்கள், டூவீலர்கள் வந்து செல்கின்றன. எந்த சூழ்நிலையிலும் விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான்கு வழிச்சாலையில் ஏராளமான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்களும் கிடையாது. இந்த வழித்தடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக காரியாபட்டி செவல்பட்டி பிரிவு ரோடு, கள்ளிக்குடி பிரிவு ரோடு உள்ளன. காரியாபட்டி ஊருக்குள் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. பிரிவு ரோட்டில் வாகனங்கள் திரும்பும் போது அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து நடக்கின்றன. இதற்கு முக்கிய காரணம்நான்கு வழிச்சாலை பிரிவு ரோட்டில் உயர் கோபுரம்மின் விளக்கு இருந்தது.கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் இருந்த உயர் கோபுரம் மின் விளக்கு காணாமல் போய் பல மாதங்கள் ஆகின. அதேபோல் செவல்பட்டி பிரிவு ரோட்டில் சில மாதங்களாக உயர் கோபுரம் மின் விளக்குகள் எரியாமல் இருளில் உள்ளன. அங்கு இருந்த சிக்னல் விளக்கும் எரியவில்லை.வாகனங்கள் ஊருக்குள் திரும்ப முற்படும்போது நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்தை தடுக்க பிரிவு ரோடுகளில் உயர் கோபுரம் மின் விளக்கை எரிய விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்:
12 hour(s) ago
12 hour(s) ago