மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் கயர் குத்து திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.சிவகாசி பத்ரகாளியம்மமன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப். 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழாவில் நேற்று முன்தினம் கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. 9ம் நாளான நேற்று கயர்குத்து திருவிழா நடந்துது.பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும், உருண்டு கொடுத்து, மாவிளக்கு எடுத்து, கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மன் திருவீதி வலம் வந்து தேர் அலங்காரம் காணுதல் நிகழ்ச்சி நடந்தது.நாளை தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் பட்டாசு உள்ளிட்ட ஆலைகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
12 hour(s) ago
12 hour(s) ago