உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா

சிவகாசி: சிவகாசி அருகே சோரம்பட்டி செல்வவிநாயகர், பைரவர், காளியம்மன் திருக்கோயிலில் அஷ்டமந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்கி, தினமும் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஹோமம் நடந்தது. முதல் கால யாக சாலை பூஜை, இரண்டாம் கால, 3 ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை