உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓட்டையான தண்ணீர் குழாய், பழுதான மோட்டார் பாராமுக அதிகாரிகளால் திணறும் தீயணைப்பு துறையினர்

ஓட்டையான தண்ணீர் குழாய், பழுதான மோட்டார் பாராமுக அதிகாரிகளால் திணறும் தீயணைப்பு துறையினர்

விருதுநக : விருதுநகரில் நேற்று நகை கடையில் நடந்த தீ விபத்தை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் பயன்படுத்திய தண்ணீர் குழாயில் ஓட்டை, புகையை வெளியேற்றும் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால் தீயை அணைப்பதற்கு ஊழியர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டது. மாவட்ட தீயணைப்புத்துறை நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் ஊழியர்கள் சிக்கலுக்கு ஆளாகி வருகின்றனர்.விருதுநகர் - மதுரை ரோட்டில் நேற்று மதியம் நகைக்கடையின் முதல் தளத்தில் உள்ள கணினி அறையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தை இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.இந்நிலையில் தீயணைப்பு வாகனத்தில் இருந்து முதல் தளத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் தெளிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த குழாயில் ஓட்டை இருந்தது. இதனால் மற்றொரு தீயணைக்கும் வாகனத்தின் டயரில் தண்ணீர் தெளித்து வீணாகியது.மேலும் புகையை வெளியேற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனை எப்படியாவது இயக்கி விட வேண்டும் என சக பணியாளர்கள் ஒவ்வொருவராக தொடர்ந்து முயற்சி செய்தனர். ஆனால் மோட்டாரை இயக்க முடியாமல் கடைக்குள் வைத்து விட்டு தொடர்ந்து தண்ணீர் தெளிப்பான் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி ப ட்டாசு விபத்துக்கள் நடப்பதால் தீயணைப்பு துறையினருக்கு அனைத்து உபகரணங்களும் வழங்கப்படுவதையும், அவை செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை மாவட்ட தீயணைப்புத்துறையினர் அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். ஆய்வுகள் நடத்தாத பட்சத்தில் இது போன்ற விபத்து நேரங்களில் தீயணைப்பு உபகரணங்கள் பழுதாவதால் ஊழியர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது.எனவே மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் உபகரணங்கள் போதிய செயல்பாட்டில் இருப்பதையும், தேவையான புதிய உபகரணங்களை வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை