உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பட்டாசு சங்கங்களுக்கு கடிதம்

போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பட்டாசு சங்கங்களுக்கு கடிதம்

சிவகாசி : சிவகாசி அருகே வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலைகளில் நடத்தப்படும் ஆய்வை கண்டித்து ஆலைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாப்மா சங்கத்தினர், சிவகாசியில் உள்ள மற்ற பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர்.சிவகாசி பகுதியில் சரவெடி உற்பத்தி செய்யும் சிறு பட்டாசு ஆலைகளை நடவடிக்கை எடுப்பதை கண்டித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் மே 24 முதல் பட்டாசு ஆலைகளை மூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பாக மே 27 ல் இச்சங்கத்தினர் கலெக்டரிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது. இன்று வரை 7 நாட்கள் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் இதுவரையிலும் ரூ. 14 கோடி வரை பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர்.டாப்மா சங்கம் சார்பில் சிவகாசியில் உள்ள மற்ற பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கங்களான டான்பாமா, டிப்மா, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர்.இது குறித்து அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், எங்கள் சங்கத்தின் சார்பாக பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை செய்து வருகிறோம். தற்போதும் பட்டாசு ஆலைகளை மூடியும் நமது கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். மேலும் இந்தப் போராட்டத்தினை வலுப்பெறச் செய்ய தாங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை