உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மனைவி கொலை கணவருக்கு ஆயுள்

மனைவி கொலை கணவருக்கு ஆயுள்

ஸ்ரீவில்லிபுத்துார் ; அருப்புக்கோட்டை அருகே குடும்பத்தகராறில் மனைவி ராமுத்தாயை 59,வெட்டி கொலை செய்த கணவர் அய்யனாருக்கு 69,ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தத்தை சேர்ந்தவர் அய்யனார். சொந்த ஊரில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ராமுத்தாய். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் டீக்கடையை மூடிவிட்டு, விவசாயம் செய்து வந்தார். அதிலும் நஷ்டம் ஏற்பட்டதால், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த மனைவி ராமுத்தாயை, 2022 நவ.12ல் வெட்டி அய்யனார் கொலை செய்துள்ளார். பந்தல்குடி போலீசார் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அய்யனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி