மேலும் செய்திகள்
மழைக்கால நோய்களிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க அறிவுரை
6 minutes ago
மாதிரி நீதிமன்றம்
57 minutes ago
விருதுநகரில் கொட்டித்தீர்த்த மழை
58 minutes ago
நரிக்குடி : நரிக்குடிஇருஞ்சிறை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகள் மது அருந்தி, பாட்டில்களை உடைத்தும், பாலிதீன் கவர்கள்,பிளாஸ்டிக் கப்புகளை போட்டு குப்பையாக்கிவருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.நரிக்குடி இருஞ்சிறையில் அரசு உயர்நிலைப்பள்ளியில்,நுாற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்ய அங்கு மினரல் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது.இதைபாதுகாக்க பள்ளியில் சுற்றுச் சுவர்இல்லை.இந்நிலையில் பள்ளி முடிந்ததும் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்தில் மது அருந்தி, போதை தலைக்கு ஏறியதும் மது பாட்டில்களை உடைக்கின்றனர்.இது மறுநாள் காலையில் பள்ளிக்கு வரும்மாணவர்களின் கால்களை பதம் பார்க்கிறது.பாலிதீன்கவர்கள், பிளாஸ்டிக் கப்களை போட்டு குப்பையாக்கி வருகின்றனர்.பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கு போடப்பட்டுள்ள மதுபாட்டில்கள், பாலிதீன் கவர், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதை தடுக்க சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6 minutes ago
57 minutes ago
58 minutes ago