| ADDED : ஜூன் 29, 2024 04:50 AM
விருதுநகர், : விருதுநகர் நகராட்சி பகுதிகளில் ஒரு புறம் குரங்கு, மறுபுறம் பன்றி தொல்லையால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.விருதுநகர் நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே பெரிய தொல்லையாக நாய்த்தொல்லை இருந்து வருகிறது. இந்த சூழலில்புதிய பிரச்னையாக வேலுச்சாமி நகர் பகுதிகளில் பன்றிகளும், நேருஜி நகர், உழவர் சந்தை பகுதி, கலைவாணர் நகர் பகுதிகளில் குரங்குகளும் அதிகளவில் நடமாடி வருகின்றன. முன்பிருந்தே இப்பகுதிகளில் இப்பிரச்னை உள்ளது. அவ்வப்போது கட்டுப்படுத்தப்பட்டாலும் அவை மீண்டும் மீண்டும்வந்து விடுகின்றன. இது குடியிருப்போருக்கு பெரிய தலைவலியாக உள்ளது. குறிப்பாக பன்றிகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இது அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது. குரங்குகள் வீட்டின் மாடியில் வைக்கப்படும் உணவு பொருட்களை எடுத்து செல்கின்றன. வீடு விட்டு வீடு தாவும் போது ஒயர்களில் சிக்கி காயமடையவும் செய்கின்றன. சிறிய குழந்தைகளை தாக்கவும் செய்கின்றன. வனத்துறை குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடவும், நகராட்சி அதிகாரிகள் பன்றிகள் வளர்ப்பதை முறைப்படுத்த வேண்டும்.