மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
15 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
15 hour(s) ago
காரியாபட்டி: காரியாபட்டி அருகே ஓராண்டுக்கு மேலாக மெதுவாக நடக்கும் பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். காரியாபட்டி ஸ்ரீராம்பூர் அருகே அல்லாளப்பேரி, முடுக்கன்குளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு வரும் நீர் வரத்து ஓடையின் குறுக்கே, காரியாபட்டி நரிக்குடி ரோடு உள்ளது. மழை நேரங்களில் பல்வேறு கண்மாய்களிலிருந்து வெளியேறும் உபரி நீர், காட்டுப் பகுதிகளிலிருந்து வரும் மழை நீர் சேர்ந்து இந்த ஓடையில் அதிக அளவில் தண்ணீர் வரும்.ரோட்டின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்ததால் அதிக அளவில் தண்ணீர் வரும் போது வாகனங்கள் சென்றுவர முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.மேலும் தரைப்பாலம் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாகி வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தரைப்பாலத்தை அப்புறப்படுத்தி உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.அதன் அடிப்படையில் அங்கு உயர் மட்ட பாலம் கட்டும் பணி ஓராண்டுக்கும் மேலாக மெதுவாக நடந்து வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன.இந்நிலையில் தற்காலிகமாக ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட மண் ரோடு, மழைக்காலத்தில் அதிக அளவில் வரும் தண்ணீரால் உடைப்பு ஏற்பட்டு ரோடு துண்டிக்கப்படும் நிலை உள்ளது.லேசான மழைக்கே சேரும் சகதியுமாக உள்ளது. இரு வாகனங்கள் விலகிச் செல்ல முடியாது. ஒருவேளை விலகிச் செல்ல முற்படும்போது சகதியில் சிக்கி ஓடையில் கவிழும் ஆபத்து உள்ளது. தற்போது மண் ரோட்டில் மழை நீர் தேங்கி குண்டும் குழியுமாகி வாகனங்கள் குலுங்கி செல்கிறது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
15 hour(s) ago
15 hour(s) ago