உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டோரத்தில் திறந்தவெளி கிணறு அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ரோட்டோரத்தில் திறந்தவெளி கிணறு அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சிவகாசி, ; சிவகாசி அருகே ஊராம்பட்டி ஊராட்சி மணியம்பட்டியில் ரோட்டோரத்தில் உள்ள திறந்தவெளி கிணறால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே தடுப்பு அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி அருகே ஊராம்பட்டி ஊராட்சி மணியம்பட்டியில் ரோட்டோரத்தில் கிணறு உள்ளது. இதனைக் கடந்து பஸ்கள், பள்ளி வாகனங்கள், பட்டாசு ஆலை வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும் இந்த கிணறு ரோட்டில் வளைவு பகுதியில் உள்ளது. இந்நிலையில் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்த இந்த கிணறு திறந்த நிலையில் உள்ளது.தற்போது பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் தண்ணீர் உள்ளது. மேலும் கிணறு அருகே கோயில், பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் தெருவிளக்குகளும் இல்லை. இதனால் இங்கு கிணறு இருப்பதே தெரியாது. இதனை கடந்து செல்கின்ற டூவீலர் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். சற்று கவனம் சிதறி கிணற்றில் விழுந்தாலும் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே உடனடியாக இங்கு அடையாளத்துடன் கூடிய தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை