உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தட்டச்சு தேர்வில் நரிக்குடி மாணவி முதலிடம்

தட்டச்சு தேர்வில் நரிக்குடி மாணவி முதலிடம்

நரிக்குடி : நரிக்குடி சமத்துவபுரத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகள் ரேணுகா 17. நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்தார். 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இந்நிலையில் நரிக்குடி பகுதியில் இயங்கி வரும் தட்டச்சு பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்த ரேணுகா, 6 மாத பயிற்சிக்கு பின், 2024ம் ஆண்டிற்கான அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தால் மாநில அளவில் அரசு தட்டச்சு தேர்வில் ஹை ஸ்பீடு பிரிவில் நிமிடத்திற்கு 67.5 வார்த்தைகள் என 10 நிமிடத்திற்கு தேர்வு நடைபெற்றது. நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ரேணுகா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். தட்டச்சு பயிற்சி பள்ளி முதல்வர் தாஸ் பிரகாஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் ரேணுகாவை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை