உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நின்ற லாரி மீது டூவீலர் மோதியதில் ஒருவர் பலி

நின்ற லாரி மீது டூவீலர் மோதியதில் ஒருவர் பலி

திருச்சுழி: திருச்சுழி அருகே மேலையூரை சேர்ந்த லோடுமேன் சக்தி 52, இவர் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊரிலிருந்து சாயல்குடி மெயின் ரோட்டிற்கு பஸ்சில் வாழை இலை கட்டுகளை ஏற்ற வந்தார். ரோடு ஒரத்தில் நின்று கொண்டிருந்த சிமென்ட் லோடு ஏற்றிய லாரி மீது பின் பக்கத்தில் மோதியதில் காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். பரளச்சி போலீசார் லாரி டிரைவர் சுதாகரன் 45, மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ