உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊராட்சி துணை தலைவர் வீடு முற்றுகை

ஊராட்சி துணை தலைவர் வீடு முற்றுகை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்தரையர் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக திருபுவனத்தில் இருந்து கட்டங்குடி, பாலையம்பட்டி வழியாக வைகை குடிநீர் பகிர்மான குழாய்கள் மூலம் அருப்புக்கோட்டை நகராட்சி மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.முத்தரையர் நகர் வழியாக செல்லும் பகுதியில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் 2 குழாய்கள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகளாக அந்த குடிநீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.தற்போது அருப்புக்கோட்டை நகராட்சி குடிநீர் கொண்டு செல்வதற்கு புதிய குழாய்கள் மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலை வழியாக அமைக்கப்பட்டதால் முத்தரையர் நகர் பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.தண்ணீர் வராததால் மக்கள் ஊராட்சி துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் வீட்டை நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பேசி புதிய குழாய் அமைத்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக துணைத் தலைவர் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ