|  ADDED : மார் 22, 2024 04:27 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் எக்ஸ்ரே பிரிவிற்கு செல்லும் பகுதியில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக்  ரோடு சேதமாகி மேடுபள்ளங்களாக இருப்பதால் ஸ்ட்ரெச்சர் ,டிராலியில் செல்லும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல பகுதியில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.  விபத்தில் சிக்கி மருத்துவமனையில்  அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன்  எடுப்பதற்காக அருகே உள்ள பழைய கட்டடத்தில் இயங்கும் எக்ஸ்ரே பிரிவிற்கு அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் டிராலி பயன்படுத்தப்படுகிறது. எக்ஸ்ரே பிரிவிற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக்  சேதமாகி மேடுபள்ளங்களாக உள்ளது.இந்த வழியாக ஸ்ட்ரெச்சரில் நோயாளிகளை அழைத்து செல்லும் போது மேடுபள்ளங்களின் மீது செல்வதால் காயம்பட்ட இடங்களில் கூடுதல் வலி ஏற்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் மருத்துவமனையில் உள்ள எலக்ட்ரீக் ஆம்புலன்சில் பகல் நேரத்தில் மட்டுமே நோயாளிகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை அழைத்து செல்கின்றனர்.இதை இரவு நேரங்களில் இயக்குவதில்லை .  இந்த வாகனத்தில் நோயாளிகளை படுக்கை நிலையில் வைத்து அழைத்து செல்ல தகுந்த வசதிகள் இல்லாததால் அமர வைத்து மட்டுமே அழைத்து செல்கின்றனர்.எனவே எக்ஸ்ரே பிரிவிற்கு செல்லக்கூடிய பேவர் பிளாக் கற்கள் ரோட்டை சீரமைத்து, நோயாளிகளை படுக்கை நிலையில் பாதுகாப்பாக அழைத்து செல்லக்கூடிய எலக்ட்ரீக் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.