மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
15 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
15 hour(s) ago
சாத்துார் : இருக்கன்குடி ஊராட்சி உறை கிணறை சுற்றிலும் சாக்கடை கழிவு நீர் தேங்குவதால் சுகதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.சாத்துார் ஊராட்சி ஒன்றியம் இருக்கன்குடி ஊராட்சியின் குடிநீர் ஆதாரமாக இப்பகுதியில் ஓடும் அர்ச்சுனா நதி உள்ளது. இங்கு அமைக்கப் பட்டுள்ள உறை கிணறு மூலம் ஊராட்சி முழுவதும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. அர்ச்சுனா நதியில் இருக்கன்குடி ஊராட்சியில் இருந்து வரும் சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் கலந்து வருகிறது. இந்த சாக்கடை முழுவதும் ஆற்றில் கலக்கிறது. தற்போது ஆற்றில் சிறிதளவு தண்ணீர் ஓடும் நிலையில் கழிவு நீரும் கலந்து ஓடுகிறது. இவ்வாறு ஓடும் நீர் இருக்கன்குடி ஊராட்சிக்காக அமைக்கப்பட்ட குடிநீர் உறை கிணறை சுற்றி ஒடுகிறது. இதனால் ஆற்று நீரும் சாக்கடை யும் உறை கிணற்றில் கலந்து விடும் அபாயம் உள்ளது. இதனை பார்க்கும் உள்ளூர் , வெளியூர் மக்கள் முகம் சுளிப்புக்கு ஆளாகின்றனர்.மேலும் உறை கிணற்றின் அருகில் அதிகளவில். பிளாஸ்டிக் கேரி பைகள், டம்ளர்கள், பிளாஸ்டிக்கேன்கள் எச்சில் இலைகள் குவிந்துள்ளன.இப்பகுதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றுவதுடன் உறை கிணறு அருகில் கழிவு நீர் செல்லாத வகையில் மண் அள்ளும் எந்திரம் மூலம் வேறு பாதையில் கழிவு செல்ல ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்னர்.
15 hour(s) ago
15 hour(s) ago