உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் வினியோகமில்லாததால் மறியலில் ஈடுபட்ட மக்கள்

குடிநீர் வினியோகமில்லாததால் மறியலில் ஈடுபட்ட மக்கள்

சிவகாசி: சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.அனுப்பன்குளத்தில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டனர்.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் நேற்றிரவு 8:00 மணிக்கு மேல் சிவகாசி சாத்துார் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேசி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி