மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
5 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
5 hour(s) ago
நீரில் மூழ்கி பலிவிருதுநகர்: ஒண்டிபுலிநாயக்கனுார் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மோகன் 40. இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இவர் மே 5 மாலை 4:00 மணிக்கு குளத்தில் குளிக்க சென்ற போது வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார். இவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து ஏற்கனவே பலியானதாக தெரிவித்தனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.பஸ் டயர் வெடித்து சகோதரிகள் காயம்சிவகாசி: சித்தமநாயக்கன்பட்டி பாளையம் தெருவை சேர்ந்தவர்கள் லதா 46, மாரியம்மாள் 44. சகோதரிகளான இருவரும் திருத்தங்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க வந்திருந்தனர். பின்னர் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக திருத்தங்கல் சிறுவர் பூங்கா தெருவைச் சேர்ந்த மகேந்திரன் ஓட்டி வந்த தனியார் பஸ்சில் ஏறி பின் சீட்டில் அமர்ந்திருந்தனர். பஸ் காளையார்குறிச்சி அருகே வரும்போது பஸ் வலது பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் பஸ் உள்ளிருந்த கட்டை விழுந்ததில் லதா, மாரியம்மாள் காயமடைந்தனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபருக்கு கத்திகுத்து ஒருவர் மீது வழக்குசாத்துார்: கண்மாய் சூரங்குடியை சேர்ந்தவர் சந்திரசேகர், மாற்றுத்திறனாளி. இவரது மருமகன் மாடசாமியிடம் மே 4 இரவு 8:00 மணிக்கு மது வாங்கித் தர கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்திரசேகர், கத்தியால் குத்தினார். மாடசாமி முதுகில் படுகாயம் அடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனை மாடசாமி சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.தெருநாயால் விபத்துசாத்துார்: சாத்துார் கே.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 48. வீரபாண்டியாபுரம் டாஸ்மாக் கடை ஊழியர். மே 3 மதியம் 1:00 மணி சாப்பிடுவதற்காக டூவீலரில் சென்றார். (ஹெல்மெட் அணிந்திருந்தார்) சாத்துார் இருக்கன்குடி ரோட்டில் ஆட்டுப் பண்ணை அருகில் தெரு நாய் டூவீலர் மீது மோதியது.ஈஸ்வரன் படுகாயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago