| ADDED : ஜூன் 10, 2024 05:50 AM
கஞ்சா: 6 பேர் கைதுஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை - விருதுநகர் மெயின் ரோடு அருகில் போலீசார் சோதனையின் போது பாலையம்பட்டியை சேர்ந்த நிஜாம் ஷெரிப் 19, பெரிய புளியம்பட்டி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்த முத்துக்குமார் 24, ஆகியோர் மாணவர்களுக்கு கஞ்சா விற்க வந்ததும், அவர்களிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.* சிவகாசி: திருத்தங்கல் 52 வீட்டு காலனியைச் சேர்ந்த சேர்மக்கனி 24, ஆலாவூரணி கார்த்திக் ஆகியோர் பள்ளி அருகே விற்பதற்காக கஞ்சா வைத்திருந்தனர். சேர்மக்கனியை திருத்தங்கல் போலீசார் கைது செய்து கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர். கார்த்திக்கை தேடுகின்றனர்.* ராஜபாளையம்: ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோட்டில் சோதனையில் சக்தி நகரை சேர்ந்த சீனிவாசன் 23, வைத்திருந்த 100 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. மேல் விசாரணையில் வத்திராயிருப்பை சேர்ந்த பாண்டியராஜ் 31, பாலகிருஷ்ணன் 28, இருவரிடம் வாங்கியது தெரிந்து அவரது வீட்டு தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த 400 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.லாரி டிரைவரிடம் வழிப்பறிதிருச்சுழி: கமுதி அருகே ஆண்டாள் நாயக்கன் புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 42, இவர் டிப்பர் லாரி டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு எம்.ரெட்டியபட்டி அருகே உள்ள ஒரு கிரஷரில் ஜல்லி லோடு ஏற்றிக்கொண்டு வந்த போது பின்னால் காரில் வந்த 25 முதல் 30 வயது மதிக்க தகுந்த ஐந்து நபர்கள் லாரியை வழிமறித்து செந்தில்குமாரை தாக்கி அவரிடமிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு ஓடி விட்டனர். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.அரசு பஸ் கண்ணாடி சேதம்சிவகாசி: கோயம்புத்துார் ஒண்டிப்புதுார் அரசு போக்குவரத்து கழக கிளையிலிருந்து டிரைவர் ரமேஷ் ஓட்டி வந்த அரசு பஸ் திருத்தங்கல்அம்பேத்கர் சிலை அருகே வரும்போது தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பரசன் 45, ஓட்டி வந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த கம்பி, அரசு பஸ் முன்பக்க கண்ணாடியின் மீது மோதியதில் கண்ணாடி சேதம் அடைந்தது. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.