உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கஞ்சா விற்ற முதியவர் கைதுசிவகாசி: நாரணாபுரம் ரோடு விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் ராமமூர்த்தி 65. இவர் சிவகாசி முருகன் கோயில் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.------முதியவருக்கு அடிசிவகாசி: வடமலாபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் 70. இவரது மகள் காந்திமதிக்கும், சகோதரி மகன் ரகுபதிக்கும் வாய் சண்டை ஏற்பட்டது. இதுகுறித்து கேட்பதற்காக பால்ராஜ் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த ரகுபதி தகாத வார்த்தை பேசி பால்ராஜை கட்டையால் அடித்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.------பட்டாசு பறிமுதல் : ஒருவர் கைதுசிவகாசி: தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் கிருபை தாஸ் 26. இவர் தனது லோடு வேனில் அனுமதி இன்றி பாதுகாப்பு இல்லாமல் பட்டாசு கொண்டு வந்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.குளிர்சாதனப் பெட்டி வெடித்து விபத்துவிருதுநகர்: காந்திபுரம் தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி 54. இவர் மகளுடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது நேற்று அதிகாலை 2:15 மணிக்கு குளிர்சாதனப்பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகியது. இருவருக்கும் காயம் ஏற்படவில்லை. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.மைனா வேட்டை: 4 பேர் பிடிபட்டனர்ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் வனத்துறையினர் பாவாலி கருப்பன்பட்டி கண்மாயில் ஆய்வு செய்தபோது, கண்மாய்கரையில் எலி அட்டையை விரித்து மைனாக்கள் வேட்டையாடிய விருதுநகர் சூலக்கரையைச் சேர்ந்த ராஜதுரை, அழகர்,பாக்கியராஜ், மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை பிடித்து, அவர்களிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட மைனாக்களை விருதுநகர் வனத்துறையினர் பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ