மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
4 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
4 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான சிமென்ட் சிலாப்கள் வருடக்கணக்கில் முட்புதர்களுக்குள் உள்ளது. இவை மழை, வெயிலுக்கு சேதமாகி உறுதிதன்மையிழந்து பாழாகும் நிலையில் உள்ளது.விருதுநகரின் சத்திரரெட்டியப்பட்டியில் உள்ள ரயில்வேகேட் பகுதியில் மற்ற இடங்களில் அமைக்கப்பட்டதை போல சுரங்கப்பாதை அமைக்க கான்கீரிட் சிமென்ட் சிலாப்கள் அமைக்கப்பட்டது. இவை ரயில்வே கேட் அருகே வைக்கப்பட்டு வருடக்கணக்கில் ஆகிறது.ஆனால் இதுவரை சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் சிலாப்கள் இருக்கும் பகுதியில் முட்புதர்கள் வளர்ந்து நிறைந்துள்ளது. இவை மழை, வெயிலுக்கு சேதமாகி பாழாகும் நிலையில் உள்ளது. அதிகாலை, இரவு நேரத்தில் அதிகமான ரயில்கள் செல்வதால் சத்திரரெட்டியப்பட்டியில் இருந்து அவசரமாக விருதுநகருக்கு செல்பவர்கள் ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் சிகிச்சைக்காக செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற சமயங்களில் அருகே உள்ள ஓடைப்பாலம் வழியாக டூவீலர், சைக்கிள்களில் செல்பவர்கள் எளிதாக கடந்து செல்கின்றனர். ஆனால் மழைக்காலத்தில் இப்பகுதியும் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் செல்ல முடிவதில்லை.இதனால் சத்திரரெட்டியப்பட்டியில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் தினமும் தாமதத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago