உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் கொட்டிய மழை

விருதுநகரில் கொட்டிய மழை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மாலை 4:00 மணிக்கு கருமேக கூட்டங்கள் உருவானது. காரியப்பட்டி, சிவகாசி, சாத்துார் பகுதிகளில் மாலை 6:00 மணிக்கு துவங்கி சாரல் மழை தொடர்ந்து பெய்தது. மேலும் ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் பகுதிகளில் மேகக்கூட்டம் மட்டுமே காணப்பட்டது.விருதுநகர், அருப்புக்கோட்டை, அதை சுற்றிய பகுதிகளில் மாலை 6:15 மணிக்கு துவங்கி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் விருதுநகர், அருப்புக்கோட்டையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி வாகனங்களில் செல்ல முடியாமல் திண்டாடினர். விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை