உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரேக்ளா மாட்டுவண்டி போட்டி

ரேக்ளா மாட்டுவண்டி போட்டி

திருச்சுழி: திருச்சுழி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா மாட்டு வண்டி போட்டி நடந்தது.திருச்சுழி அருகே கீழ பூலாங்கால் கிராமத்தில் வீர ஜக்கதேவி கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் நடந்தது. பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிக்கான போட்டிகள் தனித்தனியாக நடந்தது. கோவில் வளாகத்தில் இருந்து துவங்கி கீழ்குடி, துத்திநத்தம், வரை சுமார் 10 கி.மீ., தூரம் நடந்தது. போட்டியில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் புதுப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி சிவபாலன் மாட்டு வண்டி முதல் பரிசான 40 ஆயிரத்தை தட்டிச் சென்றது. சித்திரங்குடி ஆர்.ஜி.ஆர்., மாட்டுவண்டி 2ம் பரிசாக 35 ஆயிரத்தை பெற்றது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசான 30 ஆயிரத்தை பூலாங்கால் பகுதியைச் சேர்ந்த வட்டாளம் கனி பிரதர்ஸ் மாட்டு வண்டி தட்டிச் சென்றது. 2ம் பரிசாக 25 ஆயிரத்தை பூலாங்கால் அபுராகுட்டி மாட்டுவண்டி பெற்றது.போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கும் அதன் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ