உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை தாமதம் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை தாமதம் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

விருதுநகர்: வெம்பக்கோட்டை கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் சிகிச்சைக்கு வந்த நோயாளி சாத்துார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு இறந்தார். இந்நிலையில் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.வெம்பக்கோட்டை ஆலங்குளத்தை சேர்ந்த செந்தட்டிக்காளை.பிப். 18 மாலை இதய பாதிப்பு காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் இல்லை. மூச்சு திணறல் அதிகமானதால் அவரை சாத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்றதும், அவர் இறந்ததாக பரிசோதித்த டாக்டர்கள் கூறினர்.இந்நிலையில் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத டாக்டர் செல்வராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பிணவறையில் வெளியே வைத்தது தொடர்பான விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியதாவது,சாத்துார் அரசு மருத்துவமனைக்குவரும் போதே இறந்த நிலையில் இருந்ததாலும், நெஞ்சுவலி என்பதால், தொடர் சிகிச்சையில் இருந்துள்ளதாலும் பிரேத பரிசோதனை தேவைப்படவில்லை. அமரர் ஊர்தி வர தாமதமானதால் உடல் வெளியே வைக்கப்பட்டிருந்தது, என விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் உடல் இரவு முழுவதும் வெளியிலேயே இருந்துள்ளது. இதற்கு காரணம் குடும்பத்தாரின் அறியாமையா அல்லது அமரர் ஊர்தி வர சிக்கலா என்பது புரியாத புதிராக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை